கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நோயாளர்களுடன் தங்கியிருந்து அவர்களைப் பராமரிக்கும் நபர்களை முறையாக அடையாளப்படுத்தும் வகையில் Bystanders Pass வழங்கும் நடைமுறை இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் Dr. I.L.M. றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. A.L. பாறூக், வைத்தியர்கள், தாதிய பரிபாலகி, நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவச்சிகள் (Midwives) உள்ளிட்ட வைத்தியசாலையின் பல்வேறு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

நோயாளர்களுடன் தங்கியிருப்பவர்களை முறையாக அடையாளப்படுத்துவதன் மூலம் வைத்தியசாலையின் வார்டுகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சிறந்த நிர்வாகத்தை பேணுவதற்கு இத்தகைய அடையாள அட்டைகள் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டது.

நோயாளர்களின் பராமரிப்பில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டத்தை ஒழுங்கு படுத்துவதுடன், வைத்தியசாலையின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவும் Bystanders Pass நடைமுறை அமைந்துள்ளது.

ஊடகப் பிரிவு 

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை

கல்முனை