#அஸ்ஸாதிக் பாடசாலை மாணவர்களுக்கான #சாரணர் பயிற்சி நிகழ்ச்சி

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால் #பொத்துவில் #கோட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ஒருநாள் சாரணர் பயிற்சி நிகழ்ச்சி (2026.08.29)ஆம் திகதி பொத்துவில் #அல்அக்ஸா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடனும் சிறப்பாகவும் பங்கேற்றனர்.

மாணவர்களின் தலைமைத்துவம், ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சாரணர் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஒருநாள் முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்ச்சியின் நிறைவில், பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பொத்துவில் கோட்டக் கல்வி அதிகாரி தலைமை தாங்கியதுடன், சாரணர் சங்கத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.