இரு பிரதான கட்சிகளின் 'திருடன் - பொலிஸ்' விளையாட்டு முடிவுக்கு வந்தது: ஜனாதிபதி பேருவளையில் உரை

பேருவளை கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற "எமது அரசாங்கம், இரண்டாண்டுகள் - நாட்டிற்கு நன்மை" எனும் பிரமாண்ட மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"கடந்த பல ஆண்டுகளாக இரு பிரதான அரசியல் கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து இந்த 'திருடன் - பொலிஸ்' விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தன. ஐந்து வருடங்களுக்கு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் மற்றைய கட்சியை 'திருடர்கள்' என்று கூறுவதும், அடுத்த ஐந்து வருடங்களில் மற்றைய கட்சி ஆட்சிக்கு வந்ததும் முன்னைய ஆட்சியாளர்களை 'திருடர்கள்' எனக் குற்றம் சாட்டுவதுமாகவே காலம் கடத்தப்பட்டது.

உண்மையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், தங்களுக்குள் ஒரு மறைமுக உடன்பாட்டோடு இந்த நாடகத்தை அவர்கள் நடத்தினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சிலர் இந்த விளையாட்டில் தொடர்ந்து 'பொலிஸ்' ஆக மட்டுமே வேடமிட்டு இருந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த 'திருடன் - பொலிஸ்' விளையாட்டை விளையாடியவர்கள் இப்போதுதான் நிஜமான பொலிஸையும் சட்டத்தின் ஆட்சியையும் நேரில் பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் தற்போது திகைத்துப்போயுள்ளனர். இனிநாட்டில் இந்த 'திருடன் - பொலிஸ்' விளையாட்டு முற்றாக முடிவுக்கு வந்துவிட்டது"

என ஜனாதிபதி தெரிவித்தார்.