அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் ஆறுகள், குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் வறட்சியின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், காட்டு விலங்குகள் மற்றும் முதலைகளுக்கான நீராதாரங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.
பொத்துவில் –
அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள குஞ்சானோடை பாலத்திற்கு அருகில் தற்போது குறைந்தளவு நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நீர்நிலை அப்பகுதியில் வாழும் முதலைகளுக்கும், ஏனைய காட்டு விலங்குகளுக்கும் முக்கியமான நீராதாரமாக விளங்குகிறது.
மேலும், குஞ்சானோடை பகுதி முதலைகளை பார்வையிடுவதற்காக #உல்லாசப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் இடமாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் பொத்துவில் பிரதேசத்திற்கும் #வருமானம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், குறைந்தளவில் தேங்கியுள்ள நீரை சிலர் #கண்டெய்னர் மூலம் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முதலைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளுக்கு மேலும் #நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பிரதேச #மக்கள்கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தற்போதைய வறட்சியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, குஞ்சானோடை பகுதியில் தேங்கியுள்ள நீரை பாதுகாப்பதற்கும், முதலைகள் மற்றும் ஏனைய காட்டு விலங்குகள் தொடர்ந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகவும், பிரதேசத்தின் வருமானத்திற்கு பங்களிக்கும் பகுதியாகவும் விளங்கும் இந்நீர்நிலையை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.