ஏயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (04) காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்ஷ, சுமார் 5 மணிநேரம் அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.வாக்குமூலம் வழங்கி முடித்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.🔴 மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன…