நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளது

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நிதிப்பங்களிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்கள் மற்றும் மானுட அபிவிருத்தி உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது