தென்னிந்திய தமிழ் திரைப்படமான ‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் இலங்கையில் சிறப்பாகவும் கோலாகலமாகவும் இடம்பெற்றது.

ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை சி. பிரபுராம் இயக்கியுள்ளார்.

‘நல்லபடம்’ திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

🎼 இசையும் பாடல்களும்

மட்டக்களப்பைத் தாயகமாகக் கொண்ட இசையமைப்பாளர் டாக்டர் சகிஷ்னா சேவியர் ‘நல்லபடம்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை நான் எழுதியுள்ளேன். பாடல்களுக்கு வேல்முருகன், அருள் பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் குரல் வழங்கியுள்ளனர்.

 பொத்துவில் அஸ்மின் ✍️