பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  கலைஞர்களை ஒன்றுபடுத்தி ஆவணப்படுத்தும் முகமாக

பொத்துவில் பிரதேசசெயலக கலாசார அதிகாரசபையினால் கலைஞர்களுக்கு இடையிலான ஒன்று கூடல் நிகழ்வு இன்று (2026.08.25) பொத்துவில் பிரதேச செயலாளர் M.A.C அஹமட் நசீல் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

 

இந்நிகழ்வினை பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவரும்  தொழில் வழிகாட்டல் ஆலோசகரும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலைஞருமான ஜெளபர், மற்றும்

பிரதேச கலாசார குழுவின் செயலாளரும்

 பிரதேச சபையின் உத்தியோகத்தரும் கலைஞருமான அஸ்ரப், கவிஞரும் எழுத்தாளருமான அகமது பைசல், பிரதேச கலாசார உத்தியோகத்தர் கோகுலதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் பிரதேசத்தின் மூத்த மற்றும் இளம்   கலைஞர்கள் என பலரையும் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் கௌரவ பிரதேச உறுப்பினர் ஜெம்சித் ராபி , சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் அமானுல்லா சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் கரீம்,மற்றும் ஊடகவியலாளர்கள் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பாவாக்களின் பகீர், கிராமியக் கவி, கலைஞர்களின் அறிமுகம் என நிகழ்வு சுவாரஸ்யமாக இடம் பெற்றதோடு தொடர்ச்சியாக கலைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான பங்களிப்பினை பிரதேச செயலாளரின் உதவியுடன் இணைந்து செயல்படுவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. 

"மனம் திறந்து பேசுவோம்" 

எனும் மகுடத்தின் கீழ் நாவலற்றில் பகல் போசன உணவுடன் கலைஞர்கள் குழாம்  ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை கலாசார அதிகார சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலைஞர்களுக்கு தனது உரையில் குறிப்பிட்டார் .

வருகை தந்த கலைஞர்கள் பலரும் நிகழ்வை பாராட்டி கருத்துரை வழங்கியமை இன் நிகழ்வின் சிறப்பம்சமாகும். 

நிகழ்வில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

#பொத்துவில் #கலைஞர்கள் #