எமது பிரதேசத்தில்

இலை மறை காயாக வாழுகின்ற கலைஞர்களை ஒன்றுப்படுத்தி அவர்களுடைய கலைத்திறன் மற்றும்  இலக்கிய படைப்பு சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது

பொத்துவில் பிரதேசத்தில் இதுவரை காலமும் இளம் கலைஞர்கள் சம்பந்தமாக ஒரு ஆவணப்படுத்தல்  இல்லாததிருப்பது மிகப்பெரும் கவலை அளிக்கிறது .

 

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் 2026.08.25 ம் திகதி செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு இளம் கலைஞர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எமது பிரதேசத்தில் உள்ள மூத்த கலைஞர்களை அறிமுகம் செய்தல்

 

இளம் கலைஞர்கள்  சம்பந்தமான உங்களது பெயர் விபரங்கள்  தொகுப்பு ஒன்றினைச் செய்து அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு தகவல் மையத்தை பொத்துவில் பிரதேச செயலகத்தில் உருவாக்குதல் 

 

உங்களது கலைத்துவம் சம்பந்தமான படைப்புக்களை ஒன்றுப்படுத்தி

தரம் கண்டு அதனை நூலுருவாக்குதல்  

இளம் கலைஞர்களாகிய உங்களது படைப்புக்களை அரங்கேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குதல்

 

தமிழ் இலக்கியத்தைப் போன்று ஆங்கில இலக்கியம் சம்பந்தமான ஆவணப்படுத்தல் இதற்கான தகவல்கள் தேவைப்படுவதால் கட்டாயம் நீங்கள் இதில்கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

பாடசாலையில் மற்றும் காரியாலயங்களில்   கடமை புரியும் அரச உத்தியோகத்தர்களுக்கான  பிரதேச செயலாளர் ஒப்பமிட்ட அழைப்பிதழ் கடிதம் உங்கள் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும்

தகவல் மற்றும் ஏற்பாடு:

S.கோகுலதாஸ்

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்

N முஹமட் ஜௌபர் தலைவர் .

எம் எஸ் எம். அஷ்ரப் செயலாளர்.

கலாசார அதிகார சபை

பிரதேச செயலகம்

பொத்துவில்.