(ஜலீல் ஜீ )
நிர்வாகச் சவால்கள் எத்தகையதாக இருந்தாலும், அவற்றை பொறுப்புடன் எதிர்கொண்டு நோயாளிகளுக்கான சேவைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டும் என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
இன்று (24) பணிக்கு திரும்பிய அவர், வைத்தியசாலை அதிகாரிகளை கூட்ட மண்டபத்தில் சந்தித்து உரையாற்றினார்.
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் சீராக முன்னெடுக்கப்பட்டமைக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு காரணம் என தெரிவித்த அவர்,
மருத்துவர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் ஒரே குழுவாக செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவையின் தரம் எந்தவொரு சூழ்நிலையிலும் குறையக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.