பொத்துவில் வரலாற்றில் புதிய அத்தியாயம் – காழி நீதிமன்ற நீதிபதியாக #ஆலிம் ஒருவர் நியமனம்.

பொத்துவில் பிரதேச காழி நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள அஷ்-ஷெய்க், அல்ஹாபிழ் #ALஇர்ஷாத் (ஹுமைதி) ஹஸ்ரத் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

பொத்துவில் #பெரியஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம இமாமாகவும் கடமையாற்றி வரும் அன்னார், மார்க்க மற்றும் சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சிறப்பான சேவையாற்றி வருகின்றார்.

பொத்துவில் வரலாற்றில் காழி நீதிமன்ற நீதிபதியாக ஓர் ஆலிம் நியமிக்கப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதுடன், இது பொத்துவில் மக்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

அஷ்-ஷெய்க், அல்ஹாபிழ் A.L. இர்ஷாத் (ஹுமைதி) ஹஸ்ரத் அவர்களுக்கு lanka tamil fm  சார்பில் இனிய வாழ்த்துக்கள்!