களப்புக்கட்டு ஜூவைரியா பெண்கள் அரபுக் கல்லூரியின் 2ஆம் மாடிக்கான கொங்கிரீட் இடும் பணிகள் ஆரம்பம்

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களப்புக்கட்டு P/15, பிரிவில் ஜூவைரியா பெண்கள் அரபுக் கல்லூரி இயங்கி வருகிறது

நேற்றைய தினம் (2026.08.28) இக்கல்லூரியில் 2ஆம் மாடிக்கான கொங்கிரீட் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித், கௌரவ பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப் முதுநபீன், பொத்துவில் ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் முகைதீன் பாவா, மத்ரஸாவின் நிர்வாகத்தினர் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

இப்பணிகள் கல்லூரியின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியமான ஒரு முன்னேற்றமாக அமைகின்றன.