புனித அல்குர்ஆன் நிறைவு விழா
2026/08/21 அன்று தக்வா இஸ்லாமிய கலாபீடத்தில் சிறப்புமிக்க மற்றும் நினைவுகூரத்தக்க நிகழ்வாக கலாபீடத்தின் தரம் 07 மாணவரான எம். எச். முஹம்மத் அவர்கள், புனித அல்குர்ஆன் மனனத்தை சபையோர் முன்னிலையில் வெற்றிகரமாக நிறைவு செய்தார். 📖🌙
இம்மாணவன் பொத்துவிலைச் சேர்ந்த அதிபர் H.R.M கலீல் மற்றும் லத்திபா ஆசிரியையின் செல்வ புதல்வனாகும்.
இம்மகத்தான சாதனை, ஒரு மாணவரின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; அவருக்கு துணைநின்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கலாபீட நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் அழகிய பயனாகும்.
அல்குர்ஆன் மனனம் மற்றும் பாடசாலைக் கல்வியையும் சமநிலையுடன் முன்னெடுத்து, மாணவர்களை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும் தக்வா இஸ்லாமிய கலாபீடத்தின் சாதனை பாராட்டத்தக்கது. நன்றிகள்
🤲 அல்லாஹ் எம். எச். முஹம்மத் அவர்களின் இச்சிறப்பான சாதனையை ஏற்றுக்கொண்டு, புனித அல்குர்ஆனை அவரது வாழ்வின் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் ஆக்குவானாக.
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! 🤲