181 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவி...!!!
2026 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவி 'முஹம்மத் முஜாஹித் பாத்திமா லிபா' 181 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் முதலிடம் பெற்றுச் சாதனை நிலைநாட்டியுள்ளார்.
குறித்த மாணவி அடங்கலாக மருதமுனை பாடசாலைகளிலிருந்து 72 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அல்-மனார் மத்திய கல்லூரியில் 32 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் குறித்த மாணவி 181 புள்ளிகளைப் பெற்று பிரதேசப் பாடசாலைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றவராகப் பதிவாகியுள்ளார்.
மாணவ, மாணவிகளின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், அதிபர், பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.